17 வயது சிறுமியை கடத்தி பாலியல் தொல்லை கொடுத்த வாலிபரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ளனர்.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டியை அடுத்துள்ள கண்ணியப்பபில்லைபட்டியில் பிரேம்குமார்(21) என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் இவர் 17 வயது சிறுமியிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி கடத்தி சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
இதனையறிந்த சிறுமியின் பெற்றோர் உடனடியாக ஆண்டிபட்டி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் போக்சோ சட்டத்தில் பிரேம்குமாரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.