உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் 2 மாதத்தை எட்டி உள்ளது. உக்ரைனின் பல நகரங்களை ரஷ்யா படிப்படியாகத் தாக்கி அழித்து வருகிறது. குறிப்பாக் மிகப்பெரிய துறைமுக நகரமான மரியுபோல் நகரை ஏறக்குறைய முழுவதுமாக ரஷ்யப்படை கைப்பற்றியுள்ளது. தற்போது அங்கு இருக்கக்கூடிய மிகப்பெரிய எஃகுஆலையைக் கைப்பற்ற போராடிவரும் நிலையில் உக்ரைன் வீரர்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர். இதற்கிடையில் உக்ரைன் வீரர்கள் ஆயுதங்களை கொடுத்து விட்டு சரணடைய வேண்டும் என்று ரஷியா ஒருமுறை எச்சரிக்கை விடுத்தும் சரணடைய மாட்டோம் எனவும் தங்களால் முடிந்தவரை போராடுவோம் எனவும் உக்ரைன் வீரர்கள் தெரிவித்தனர்.
எனினும் 1,000 மக்களும் தஞ்சமடைந்து இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், மரியுபோலிலுள்ள உக்ரைன் வீரர்கள் சரணடைய வேண்டும் எனவும் இல்லையென்றால் தாக்குதல் நடத்தப்படும் எனவும் மீண்டும் ரஷ்யா எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் தங்களுடைய கடைசி நாட்களை எண்ணிக் கொண்டிருப்பதாக உக்ரைன் வீரர்கள் வருத்தம் தெரிவித்து உள்ளனர். அத்துடன் மேற்கத்திய நாடுகள் தங்களுக்கு உதவவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். ஏற்கனவே மரியுபோலில் சிக்கியுள்ள மக்களை மனிதாபிமான முறையில் மீட்க அனுமதிக்க வேண்டும் என்று ரஷியாவுக்கு ஐ.நா. மற்றும் உலக நாடுகள் வலியுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது