சியோமி நிறுவனமானது தான் அறிமுகப்படுத்தும் ஸ்மார்ட் போன்களில் ஏராளமான மாடல்களை இன்னும் ஆண்ட்ராய்டு 12 க்கு அப்டேட் செய்யவில்லை. இருப்பினும் பல்வேறு போன்களுக்கு ஆண்ட்ராய்டு 13 வெளியிடுவதற்கான வேலைகளில் சியோமி நிறுவனம் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. அந்த வகையில் ஆண்ட்ராய்டு 13 இல் வரவிருக்கும் ரெட்மி, சியோமி மற்றும் போக்கோ ஸ்மார்ட்போன்கள் பட்டியலை சியோமி யு.ஐ வலை தளம் வெளியிட்டுள்ளது.
இந்த தகவல்களின் படியே 2021-ஆம் வருடத்திற்கு பிறகு அறிமுகம் செய்யப்பட்ட ஜியோமி, ரெட்மி மற்றும் போக்கோ பிராண்ட் ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு ஆண்ட்ராய்டு 13 அப்டேட் வழங்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதற்காக புது ஃபர்ம்வேர் வரும் மாதங்களில் வெளியாகும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது. இருப்பினும் இதுகுறித்து சியோமி நிறுவனம் சார்பில் இதுவரை எந்த தகவலும் வெளியிடப்படவில்லை.