Categories
மாநில செய்திகள்

குடிநீர் திட்டங்கள்: தமிழகத்தில் 130 பேரூராட்சிகளில்…. அமைச்சர் நேரு தகவல் …..!!!!!

தமிழ்நாட்டில் முதற் கட்டமாக 130 பேரூராட்சிகளில் குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்பட இருக்கின்றன என்று நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் நேரு தெரிவித்தார்.

பேரவையில் கேள்வி நேரத்தின்போது நடைபெற்ற விவாதத்தில் திமுக பிச்சாண்டிகூறியதாவது, திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்துார் தொகுதி வேட்டவலம் பேரூராட்சியில் 1 லட்சம் லிட்டர் கொள்ளளவுள்ள மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி அமைக்க வேண்டும் என்று கேட்டார். அதற்கு அமைச்சர் நேரு “வேட்டவலம் பேரூராட்சி பகுதியில் மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி அமைக்கும் பணி விரைவில் தொடங்கப்படும். மேலும் குடிநீர் பஞ்சமுள்ள பகுதிகளுக்கு, குடிநீர் ஆதாரம் உள்ள பகுதிகளிலிருந்து வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார். இதில் முதற் கட்டமாக முக்கிய தேவையுள்ள 130 பேரூராட்சிகள் தேர்வு செய்யப்பட்டு குடிநீர் திட்டப் பணிகள் நிறைவேற்றப்பட இருக்கின்றன.

திருவண்ணாமலை, வேலுார் மாவட்டத்தின் ஒரு பகுதிக்கு 9,680 கோடி ரூபாய் செலவில் காவிரி கூட்டுக் குடிநீர் திட்டம் புதிதாக செயல்படுத்தப்பட இருக்கிறது. ஆகவே கூடியவிரைவில் முதல்வர் ஒப்புதல் பெற்று இந்த திட்டம் நிறைவேற்றப்படும். அதன்பின் திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் குடிநீர் வழங்கப்படும்” என்று கூறினார். அதனை தொடர்ந்து அதிமுக மரகதம் குமரவேல் “மதுராந்தகம் தொகுதி, அச்சிறுப்பாக்கம் பேரூராட்சியில், குடிநீர் பற்றாக்குறை இருக்கிறது. இதனால் அங்கு 1 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி அமைக்க வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார். அதற்கு அமைச்சர் நேரு ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்” என தெரிவித்தார்.

Categories

Tech |