மத்திய தொகுப்பில் இருந்து தென் மாநிலங்களுக்கு வழங்கப்படும் மின்சாரம் திடீரென நிறுத்தப்பட்டதே மின்தடைக்கு காரணம் என அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் சமீப காலமாகவே திடீரென்று மின்வெட்டு ஏற்படுகிறது. இதனால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். தற்போது கோடைகாலம் என்பதால் கூடுதலாக சிரமப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் திடீர் மின்விபத்து ஏற்பட்டதற்கு மத்திய தொகுப்பிலிருந்து தென் மாநிலங்களுக்கு வழங்கப்படும் மின்சாரம் சுமார் 750 மெகாவாட் திடீரென தடை பட்டதே காரணம் என்று தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி விளக்கம் அளித்துள்ளார்.
இதனால் வாரியத்தின் உற்பத்தி திறன் உடனடியாக அதிகரிக்கப்பட்டது என்றும் தனியாரிடம் இருந்து கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.