Categories
உலக செய்திகள்

நீடிக்கும் போர்… நீங்கள் சரணடைந்தால் உயிருடன் காக்கப்படுவீர்கள்…. எச்சரித்த ரஷ்யா…!!

உக்ரைனிலுள்ள சுமார் 1260 நிலைகளை குறி வைத்து தாக்குதல் நடத்தியுள்ளதாக ரஷ்ய ராணுவம் தெரிவித்துள்ளது.

உக்ரைன், ரஷ்யா நாடுகளுக்கிடையே ஒரு மாத காலத்திற்கும் மேலாக போர் நீடித்து வருகிறது. இதில் அதீத பலம் கொண்ட ரஷ்யா உக்ரேனின் பல பகுதிகளில் குண்டு மழை பொழிந்து வருகிறது. இதற்கு உக்ரைனுக்கு ரஷ்யாவிற்கு தகுந்த பதிலடி கொடுத்து வருகிறது. இவ்வாறிருக்க ரஷ்ய படைகள் உக்ரைனின் கிழக்கு பகுதியை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கிடையே உக்ரைன் ஐரோப்பிய யூனியனில் இணைவதற்கு தேவையான அனைத்து வேலைகளையும் மிக தீவிரமாக செய்து வருகிறது.

இந்நிலையில் ரஷ்ய ராணுவம் ஒரேநாளில் உக்ரைனிலுள்ள 1260 நிலைகளை குறிவைத்து தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும் மரியு போல் நகரிலுள்ள உக்ரைன் ராணுவ வீரர்களுக்கு முக்கிய எச்சரிக்கை ஒன்றையும் விடுத்துள்ளது. அதாவது அவர்கள் ஆயுதங்களை கைவிட்டு சரணடைந்தால் உயிருடன் காக்கப்படுவார்கள் என்று தெரிவித்துள்ளது. இதற்கிடையே உக்ரைன் ரஷ்யாவின் முயற்சி ஒருபோதும் வெற்றி பெறாது என்றும், அவர்களை உறுதியாக தடுத்து நிறுத்துவோம் என்றும் தெரிவித்துள்ளது.

Categories

Tech |