அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரி அருகே மஞ்சமலை கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் 60-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமம் அரவேனு – அளக்கரை செல்லும் பகுதியில் அமைந்துள்ளது. இந்த கிராமத்திற்கு ஒற்றையடிப் பாதை வழியாக 400 கிலோ மீட்டர் தூரம் கடந்து செல்ல வேண்டியிருக்கிறது. இந்தப் பகுதிகள் கரடு முரடாக காணப்படுவதால் பொதுமக்களும், மாணவர்களும் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இங்கு தெருவிளக்கு வசதிகள் கிடையாது.
இங்கு தேயிலை தோட்டங்கள் அதிகமாக காணப்படுவதால் வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகமாக இருக்கிறது. இதனால் இரவு நேரங்களில் அவசர தேவைக்கு கூட வெளியே வர முடியாமல் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இந்த கிராமத்தில் சாக்கடை வசதி போன்ற அடிப்படை வசதிகள் எதுவுமே இல்லை. இவர்கள் தங்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தருமாறு அதிகாரிகளிடம் பலமுறை மனு கொடுத்தும், இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து அடிப்படை வசதிகளை செய்து கொடுக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.