சட்ட விரோதமாக போதை பொருள் விற்பனை செய்த நபரை கைது செய்த போலீசார் 1 லட்சம் மதிப்புள்ள பவுடரை பறிமுதல் செய்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே உள்ள சரவணபொய்கை ஊருணி பகுதியில் சட்ட விரோதமாக போதை பவுடர், மாத்திரை, கஞ்சா போன்றவற்றை விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் சம்பவத்தன்று போலீசார் முதுகுளத்தூர் இன்ஸ்பெக்டர் மோகன் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது மேல கன்னிசேரியில் வசிக்கும் முத்துகுமார் என்பவர் திடீரென காவல்துறையினரை கண்டதும் தப்பியோட முயன்றுள்ளார். இதனையடுத்து போலீசார் அவரை மடக்கி பிடித்து நடத்திய விசாரணையில் முத்துகுமாரிடம் சுமார் 1 லட்சம் மதிப்புள்ள 1 கிலோ போதை பவுடர் இருந்துள்ளது. அதனை பறிமுதல் செய்த போலீசார் முத்துக்குமாரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.