மத்திய பிரதேச மாநிலம் கர்கோன் மாவட்டத்தில் ராம நவமியை முன்னிட்டு தலாப் சவுக் என்ற பகுதியில் பாடல்கள் ஒலிக்கப்பட்டு பஜனைகளும் நடத்தப்பட்டன. அப்போது இந்த ஊர்வலத்தின் போது,அங்கிருந்த சிலர் இந்த ஊர்வலத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில், கல்வீச்சு சம்பவம் நடந்துள்ளது.
இந்நிலையில் இந்த ஊர்வலத்தில் முஸ்லீம்கள் சிலர் கற்களை வீசியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஆனால் இக்குற்றச்சாட்டு பட்டியலில் வாசிம் ஷேக் என்பவரது பெயர் இடம் பெற்றுள்ளது. மேலும் அவர் மீது போலீசார் வழக்குப் பதிவும் செய்துள்ளனர். ஆனால் அவருக்கு கடந்த 2005-ஆம் ஆண்டு நடந்த ஒரு விபத்தில்,இவர் இரு கைகளையும் இழந்துள்ள நிலையில், கைகளை இழந்தவர் எப்படி கல்வீசி இருப்பார். மேலும் போலீசார் எப்படி இந்த வழக்கு போட்டுள்ளனர் என கேள்வி எழும்பி வருகிறது.