உக்ரைன் தலைநகர் கீவ்விற்கு ஜெர்மன் நகரிலிருந்து வந்தடைந்த உதவிகளுக்கு நன்றி தெரிவித்த கீவ் மேயர்.
ரஷ்யாவை எதிர்த்து உக்ரைன் போர் நடத்தி வரும் நிலையில் மியூனிக் மற்றும் பிற ஜேர்மன் நகரங்களில் இருந்து கீவ் தலைநகருக்கு நன்கொடையாக 12 ஆம்புலன்ஸ்கள், 8 தீயணைப்பு மற்றும் மீட்பு வாகனங்கள், பிற உபகரணங்கள் போன்ற உதவிப் அனுப்பப்பட்டுள்ளன.
இந்த நிலையில் தலைநகர் கீவ்வின் மேயர் உதவிகளுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இன்று தனது இணையதள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் “எனது வேண்டுகோளின் பேரில் எங்கள் இரட்டை நகரமான மியூனிக் மூலம் எங்களுக்கு இன்று 12 புத்துயிர் வாகனங்களை மிக நவீன உபகரணங்களுடன் இன்று Kyivmedspetstrans வழங்கினார். மேலும் ஆற்றல் கருவிகள் மற்றும் தீயணைப்பு வீரர்களுக்கான சிறப்பு பாதுகாப்பு ஆடைகள் வந்துள்ளன.
இதனைத் தொடர்ந்து கீவ் மற்றும் உக்ரைனுக்கு உதவிய எங்கள் அண்டை நாடன ஜேர்மன் மற்றும் நண்பர்களுக்கு நன்றி. மேலும் ஜெர்மனியிலிரந்து வந்த புதிய உபகரணங்கள் விடுவிக்கப்பட்ட புறநகர் பகுதிகளில் உபயோகப்படுத்துகின்றனர் மற்றும் மீட்பு உபகரணங்கள் ஆம்புலன்ஸ்கள், தீயணைப்பு அனைத்தும் இன்று நகரத்தின் மிகவும் தேவை” என்று தெரிவித்துள்ளார்.