Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

போலீசுக்கு கிடைத்த தகவல்…. மூட்டை மூட்டையாக சிக்கிய அரிசி…. பதுக்கியவருக்கு வலைவீச்சு….!!

சட்ட விரோதமாக பதுக்கி வைத்திருந்த 1,200 கிலோ ரேஷன் அரிசியை குடிமைபொருள் வழங்கல் குற்றபுலனாய்வு துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் பகுதியில் சேலம் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை சப்-இன்ஸ்பெக்டர் அகிலன் தலைமையில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் சத்தியபிறப்பு, செல்வராஜ் மற்றும் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் அப்பகுதியில் உள்ள ஒழுகூர்பட்டி பகவதி அம்மன் கோவில் பின்புறம் சட்ட விரோதமாக ரேஷன் அரிசி பதுக்கி வைத்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

அந்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்று போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கோவிலுக்கு பின்புறம் வயலுக்கு செல்லும் வழியில் 24 பிளாஸ்டிக் சாக்கு மூட்டைகளில் சுமார் 1,200 கிலோ ரேஷன் அரிசி இருந்துள்ளது. அதனை பறிமுதல் செய்த அதிகாரிகள் இதுகுறித்து வழக்குபதிவு செய்து, அரிசியை பதுக்கி வைத்திருந்த பஞ்சப்பாளையம் பகுதியை சேர்ந்த முருகேசன் என்பவரை தேடி வருகின்றனர்.

Categories

Tech |