டென்னிஸ் வீராங்கனை தனது 35வது பிறந்த நாளன்று இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கர்ப்பமாக உள்ளதை வெளியிட்டுள்ளார்.
ரஷ்யாவை சேர்ந்த பிரபல டென்னிஸ் வீராங்கனை மரியா ஷரபோவாவும் இங்கிலாந்தைச் சேர்ந்த தொழிலதிபர் அலெக்சாண்டர் கில்கேஸ் என்பவரும் காதலித்து வந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து மரியா ஷரபோவா தன்னுடைய 35 வயதில் 5 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளார். இவர் ரஷ்யாவுக்காக விளையாடினாலும் அமெரிக்காவில் தான் வசித்து வருகிறார்.
இதனையடுத்து கடந்த 2020ம் ஆண்டு டிசம்பர் மாதம் அலெக்சாண்டர்-மரிய ஷரபோவா நிச்சயதார்த்தம் செய்துகொண்டனர். பின்னர் 2020ம் ஆண்டு டென்னிசில் இருந்து ஓய்வு பெற்ற இவர், நேற்று தனது 35வது பிறந்தநாளை கொண்டாடினார். இந்நிலையில் மரியா ஷரபோவா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் “தான் கர்ப்பமாக இருக்கும் புகைபடத்தை வெளியிட்டதோடு இந்த தருணம் இருவருக்கும் விலைமதிப்பற்ற தொடக்கம்” என்று கூறியுள்ளார்.