Categories
உலக செய்திகள்

“மெக்சிகோ உயிரியல் பூங்கா” வெப்பத்தால் தவிக்கும் விலங்குகளை குஷிப்படுத்த… பணியாளர்களின் சூப்பர் பிளான்…..!!!!!

மெக்சிகோவில் உயிரியல் பூங்காவில் வெப்பத்தால் வாடி தவிக்கும் விலங்குகளுக்கு ஐஸ்கிரீம் வழங்கப்பட்டது. அங்கு சுமார் 38 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகும் சூழ்நிலையில், விலங்குகள் உயர் வெப்பநிலையை சமாளிக்க ஏதுவாக பூங்கா பணியாளர்கள் ஒவ்வொரு விலங்குகளும் ஏற்றவாறு பிரத்யேகமாக ஐஸ்களை தயார் செய்தனர்.

இதில் சிறுத்தைப்புலிகளுக்கு மாமிசத்தால் ஆன ஐஸ்களையும், கருப்பு ஹவ்லர் குரங்குகளுக்கு பழங்களில் இருந்து தயாரிக்கப்பட்ட ஐஸ்களையும் வழங்கினர். அதுமட்டுமல்லாமல் விலங்குகளின் இருப்பிடங்களுக்கு அருகில் குழிகள் தோண்டப்பட்டு, அதில் நீரை நிரப்பி விலங்குகள் குளியலாட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அதன்படி விலங்குகள் அந்த நீர் குழிகளில் குளித்து மகிழ்கின்றன.

Categories

Tech |