ஜியோ நிறுவனம் தன்னுடைய வாடிக்கையாளர்களை கவருவதற்காக அதிரடியான திட்டங்களை அறிவித்து வருகிறது. இதனால் வாடிக்கையாளர்கள் பயன் அடைந்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது 4ஜி சேவை வழங்கும் நிறுவனங்களில் அதிக டவுன்லோட் ஸ்பீட் கொண்ட நிறுவனமாக ஜியோ தொடர்ந்து முதலிடத்தில் உள்ளதாக TRAI தெரிவித்துள்ளது.
மார்ச் மாத புள்ளிவிபரப்படி ஜியோவின் டவுன்லோட் ஸ்பீட் 21.1 mbps ஆக உள்ளது. அதற்கு அடுத்தபடியாக டவுன்லோட் ஸ்பீட் 17 .9 mbps உடன் வோடாபோன் இரண்டாவது இடத்தையும், 13.7 mbps உடன் ஏர்டெல் 3வது இடத்தையும் பிடித்துள்ளது .ஆனால் பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல் டவுன்லோட் ஸ்பீட் 6.1 mbps ஆக உள்ளது