Categories
தேசிய செய்திகள்

4 வயது சிறுமியிடம் சாக்லேட்டை காட்டி…. அத்து மீறிய இளைஞர்…. அதிர்ச்சியில் பெற்றோர்….!!!!

கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று பீகார் மாநிலத்தில் உள்ள கோபல்காஞ்ச் பகுதியில் வசித்து வரும் 30 வயது நபர் ஒருவர் 4 வயது சிறுமியை சாக்லேட்டை காட்டி ஏமாற்றி பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து மஞ்சகர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அந்த புகாரின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட நபரிடம் விசாரணை மேற்கொண்ட போது, விளையாடி கொண்டிருந்த சிறுமியை சாக்லேட்டை காட்டி ஏமாற்றி வீட்டுக்குள் வரவழைத்து பலாத்காரம் செய்தது தெரிய வந்துள்ளது.

இதற்கிடையே உயிருக்கு போராடிய நிலையில் அந்த 4 வயது சிறுமி அவசர சிகிச்சை பிரிவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அதேசமயம் சிறுமியை பலாத்காரம் செய்த அந்த இளைஞர் மீது காவல்துறையினர் போக்சோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் உள்ள பெற்றோர்கள் மத்தியில் பீதியை கிளப்பியுள்ளது.

Categories

Tech |