ஓட்டுநரை அரிவாளால் வெட்டிய நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள அஞ்சுகிராமம் அருகே மேட்டு குடியிருப்பு பகுதியில் அருணாச்சலம் என்பவர் வசித்து வருகிறார். இவர் கார் ஓட்டுநராக வேலைப்பார்த்து வருகிறார். இவருக்கும் வீரதாஸ் என்பவருக்கும் இடையே பணம் கொடுக்கல் வாங்கலில் முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் அருணாச்சலம் அஞ்சுகிராமம் அருகே சாலை ஓரமாக நின்று கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த வீரதாஸ் அருணாச்சலத்தை அரிவாளால் கொடூரமான முறையில் வெட்டினார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் அருணாச்சலத்தை மீட்டு சிகிச்சைக்காக ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இதுகுறித்த புகாரின்பேரில் ஆசாரிபள்ளம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து வீரதாசை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.