நிலநடுக்கம் காரணமாக எலாஜிக் மற்றும் மலாத்யா ஆகிய இரண்டு மாகாணங்களில் ஏராளமான வீடுகள், கடைகள், உட்பட அடுக்குமாடி கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமானது. குறிப்பாக வீடுகளில் இருந்தவர்கள் இடிபாடுகளில் சிக்கி உயிருக்குப் போராடினர். இதையடுத்து உடனே மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
