Categories
மாநில செய்திகள்

ரயில் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு…. ரயில் போக்குவரத்தில் திடீர் மாற்றம்….!!!!

தமிழகத்தில் கொரோனா காரணமாக ரத்து செய்யப்பட்ட ரயில்கள் அனைத்தும் தற்போது வழக்கம் போல இயங்கிக் கொண்டிருக்கின்றன. இந்நிலையில் இரட்டை அகல பாதைக்கான இணைப்பு பணிகள் தொடங்க உள்ளதால் தென் மாவட்ட ரயில்கள் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி இன்டர்சிட்டி விரைவு ரயில் வருகின்ற 29ஆம் தேதி நெல்லை -திருவனந்தபுரம் இடையே பகுதியாக ரத்து.

அந்தியோதயா விரைவு ரயில் இன்று முதல் ஏப்ரல் 28 ஆம் தேதி வரை தாம்பரம் -நெல்லை வரை மட்டுமே இயக்கப்படும். அதனைப் போல வாராந்திர விரைவு ரயில் வருகின்ற 28 மற்றும் 29 ஆகிய தேதிகளில் நெல்லை -நாகர்கோவில் இடையேயும், புதுச்சேரி -குமரி விரைவு ரயில் ஏப்ரல் 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் நெல்லை -குமரி இடையையும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |