இந்திய ராணுவம் அதிகாரிகளின் வாட்ஸ்அப் குழுவில் கடும் சைபர்பாதுகாப்பு மீறல் நடைபெற்று இருப்பதை இராணுவம் மற்றும் உளவுத் துறையினர் கண்டுபிடித்துள்ளனர். அதாவது வாட்ஸ்அப்பில் இராணுவ அதிகாரிகளின் இணைய பாதுகாப்பு மீறல் கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து பாதுகாப்புத்துறை தரப்பில் கூறியதாவது “இராணுவம் மற்றும் உளவுத் துறையின் தகவலின் அடிப்படையில் ஒரு வாட்ஸ்அப் குழு வாயிலாக பாதுகாப்பு மீறல் சாத்தியமாகி உள்ளது. வாட்ஸ்அப் குழுக்கள் வாயிலாகவே இது போன்ற பாதுகாப்பு மீறல் கண்டறியப்பட்டுள்ளது. இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த பாதுகாப்பு குறைபாடு தொடர்பாக உயர்மட்ட விசாரணை நடந்து வருகிறது.
மேலும் இந்த மீறல்களில் சில இராணுவ அதிகாரிகள் ஈடுபட்டுள்ளதற்கான அறிகுறிகள் உள்ளதாகவும் தகவல் தெரிவிக்கிறது. அண்மையில் தொடர்புடைய ராணுவ வீரர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவை அதிகாரப்பூர்வ ரகசிய சட்டத்தின் கீழ் வரும் விஷயமாகும். பாதுகாப்பு மீறலுக்கும் எதிரிநாட்டின் உளவு பார்க்கும் செயலுக்கும் தொடர்பு இருக்கலாம் என்பது விசாரணையில் தெரியவரும். இந்த விஷயம் குறித்து விரிவான விசாரணை நடந்து வருகிறது. மற்றொரு புறம் இந்தியாவின் அண்டை நாடுகளாக திகழும் சீனா மற்றும் பாகிஸ்தானில் உளவுத்துறை அமைப்புகள் இந்திய ராணுவ வீரர்களிடமிருந்து ராணுவ தகவல்களை கசியவிட முயற்சி செய்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
எனினும் பெரும்பாலும் அந்த முயற்சிகள் தோல்வியிலேயே முடிந்துள்ளது. இருந்தாலும் சில ராணுவ அதிகாரிகள் அவர்களின் வலையில் சிக்கி விடுகின்றனர் என பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதேபோன்று இது ராணுவ விவகாரம் என்பதால் தேசிய பாதுகாப்புக்கு பாதிப்பை ஏற்படுத்தும். இதுகுறித்த கூடுதல் விபரங்களை வெளியிட முடியாது. இச்சம்பவம் தொடர்பாக வதந்திகளை பரப்புவது என்பதும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் பெயர் விபரங்களை வெளியிடுவது என்பதும் விசாரணையை பாதிக்கும் என ராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கிறது.