பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளில் இருந்து வந்த இஸ்லாமியர்களை இந்தியாவை விட்டு அகற்ற வேண்டும் என்பதில் எந்த மாற்றுக் கருத்துமில்லை என சிவசேனா கூறியுள்ளது.
குடியுரிமை திருத்த சட்டம் (CAA), தேசிய குடிமக்கள் பதிவேடு (NRC), தேசிய மக்கள் தொகை NPR பதிவேடு ஆகிய மூன்றுக்கு எதிராக நாடு முழுவதும் பல்வறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக குறிப்பாக மத அடிப்படையில், பாகிஸ்தான், வங்கதேசம் ஆப்கானிஸ்தானில் இருந்து வந்த இஸ்லாமியர் அல்லாத அகதிகளுக்கு குடியுரிமை வழங்க வழிவகை செய்யும் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு நாடு முழுவதும் உள்ள முஸ்லிம் அமைப்புகள் கடுமையான எதிர்ப்பை தெரிவித்து போராட்டங்கள் நடத்தி வருகின்றன.
அந்த நாடுகளில் இருந்து வந்த முஸ்லிம்களுக்கு குடியுரிமை வழங்க முடியாது என்பதில் மத்திய அரசு தெள்ளத்தெளிவாக உறுதியுடன் இருக்கிறது. இந்நிலையில், பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளில் இருந்து வந்த இஸ்லாமியர்களை இந்தியாவை விட்டு அகற்ற வேண்டும் என்பதில் எந்த மாற்றுக் கருத்துமில்லை என சிவசேனா கூறியுள்ளது. சிவசேனாவின் அதிகாரப்பூர்வ நாளேடான சாம்னா பத்திரிகையில் இது தொடர்பாக தலையங்கம் வெளியிட்டுள்ளது.
அதில், ‘பாகிஸ்தான் மற்றும் வங்கதேச நாடுகளின் இஸ்லாமியர்களை இந்தியாவிலிருந்து வெளியேற்ற வேண்டும் என்பதில் சந்தேகமில்லை. எப்போதும் சிவசேனா இந்துத்துவாவுக்காக போராடியது. குடியுரிமை சட்ட திருத்தத்தில் பல ஓட்டைகள் உள்ளது. அவை சரிசெய்யப்பட வேண்டும். மகாராஷ்டிராவில் 5 ஆண்டுகளில் பாஜகவால் செய்ய முடியாத பணிகளையெல்லாம் , இப்போதைய மகா கூட்டணி 50 நாட்களில் செய்துள்ளது என சிவசேனா கூறியுள்ளது.