Categories
உலக செய்திகள்

ஊரடங்கு கட்டுப்பாடுகளையும் மீறி எது தொடர்பாக….!! பிரிட்டன் பிரதமரின் பதவிக்கு ஆபத்து…???

கடந்த 2020ம் ஆண்டு ஜூன் மாதம் கடுமையான கொரோனா காலகட்டத்தில் உலகின் பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தது. அப்போது இங்கிலாந்து நாட்டிலும் கடுமையான ஊரடங்கு அமலில் இருந்தது. இந்நிலையில் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் பிறந்தநாளை முன்னிட்டு அவருடைய மனைவி கேரி அமைச்சரவைக்கு ஒரு கேக் கொண்டு வந்திருந்தார். அதனை வெட்டி போரிஸ் ஜான்சன் அவருடைய பிறந்தநாளை கொண்டாடினார். இந்த நிகழ்ச்சியில் இங்கிலாந்து அதிபர் ரிஷி சுனக் கலந்து கொண்டார். இந்நிலையில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறி நிகழ்ச்சி ஏற்பாடு செய்ததாகவும் அதில் கலந்து கொண்டதாகவும் ரிஷி சுனக், போரிஸ் ஜான்சன் மற்றும் அவருடைய மனைவி கேரி ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து அபராதம் விதிக்கப்பட்டது.

இந்நிலையில் மூவரும் அபராத தொகையை செலுத்திவிட்டு மன்னிப்பு கேட்டனர். அதுமட்டுமல்லாமல் ஊரடங்கு காலகட்டத்தில் 12 விருந்து நிகழ்ச்சிகள் மற்றும் 6 பார்ட்டிகளில் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் கலந்து கொண்டதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதன் மூலம் இங்கிலாந்து பிரதமர் மக்களை தவறான முறையில் வழிநடத்துகிறார் அவர் பதவி விலக வேண்டும் என நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. ஈஸ்டர் பண்டிகை முடிந்து இந்த வாரம் கூடும் நாடாளுமன்றக் கூட்டத்தில் பிரதமர் மீது விசாரணை நடத்த வேண்டுமா என்பதை வாக்கெடுப்பின் மூலம் தெரிந்து கொள்ள வேண்டும் என எதிர்க்கட்சிகள் சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Categories

Tech |