மயிலாடுதுறை சம்பவம் தொடர்பாக ஆளுநரின் பாதுகாப்பு அதிகாரி விஸ்வேஷ் சாஸ்திரி தமிழக டிஜிபிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். தருமபுரம் ஆதீனத்திற்கு மயிலாடுதுறை வழியாக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சென்றபோதுபல்வேறு இயக்கத்தினரும் அரசியல் கட்சிகளும் கருப்புக்கொடி காட்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ஆளுநர் சென்ற வாகனத்தின் மீது கற்கள் மற்றும் கொடிகள் வீசி தாக்கப்பட்டதாக தகவல் வெளியானது. இதற்கு தமிழக காவல்துறையில் மறுத்தது. மயிலாடுதுறையில் தமிழக ஆளுநரின் வாகனம் மீது ஆர்ப்பாட்டகாரர்கள் கற்கள் மற்றும் கொடிகளை வீசியதாக கூறப்படுவதில் உண்மை இல்லை என்று காவல்துறை திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
இந்நிலையில் மயிலாடுதுறை சம்பவம் தொடர்பாக ஆளுநரின் பாதுகாப்பு அதிகாரி தமிழக டிஜிபிக்கு கடிதம் எழுதியுள்ளார். ஆளுநர் சென்றபோது அவரின் வாகனம் மீது அங்கு கூடி இருந்தவர்கள் கார்களை நோக்கி கொடிகளை வீசினர். அதிர்ஷ்டவசமாக பாதுகாப்பின்றி ஆளுநரின் பாதுகாப்பு காண்பாய் கடந்து சென்றது. ஆளுநரின் வாகனத்தை நோக்கி கொடிகளை வீசியவர்கள் மீது சட்ட பிரிவு 124 இன் படி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கடிதத்தில் எழுதி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.