போர்ச்சுக்கல் நாட்டின் கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ மற்றும் அவருடைய மனைவி ஜார்ஜினா. ஜார்ஜினா கர்ப்பம் தரித்து இருந்தார் இந்நிலையில் அவர்களுக்கு இரட்டை குழந்தைகள் பிறந்தது அதில் ஒன்று ஆண் குழந்தை மற்றும் மற்றொன்று பெண் குழந்தையாகும். ஆனால் திடீரென ஆண் குழந்தை உயிர் இழந்து விட்டது. இதுபற்றி கிறிஸ்டியானோ ரொனால்டோ தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில் அவர் எங்கள் குழந்தையின் இழப்பால் நாங்கள் மனமுடைந்து உள்ளோம். இந்தக் கடினமான நேரத்தில் எங்கள் தனியுரிமைக்கு முக்கியத்துவம் கொடுங்கள். மருத்துவர்கள் மற்றும் உடனிருந்த செவிலியர்களுக்கு என்னுடைய நன்றிகள் எனக் கூறியுள்ளார்.