Categories
தேசிய செய்திகள்

சுகாதாரப் பணியாளர்களுக்கு ஹேப்பி நியூஸ்… மத்திய அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…!!!!!!!

கொரோனா  பணியில் ஈடுபட்டுள்ள சுகாதார ஊழியர்களுக்கு காப்பீட்டு திட்டத்தை மேலும் 6 மாதங்களுக்கு நீட்டித்து மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
கொரோனாவிற்கு  எதிராக போராடி வரும் சுகாதார பணியாளர்களையும், அவர்களது குடும்பத்தினரையும் பாதுகாக்கும் விதமாக மத்திய அரசு கடந்த 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் இந்த சுகாதார பணியாளர்களுக்கு காப்பீட்டு திட்டத்தை அறிவித்துள்ளது. இந்தக் காப்பீடு திட்டத்தில் ரூ.50 லட்சம் வரை வழங்கப்பட்டு வருகிறது. இது கொரோனா பணிகளில் ஈடுபட்டுள்ள சுகாதார பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்கின்றது.
பிரதான் மந்திரி கரீப் கல்யாண் தொகுப்பு எனப்படும் இந்த காப்பீடு திட்டத்தின் கால அளவு இந்த ஆண்டு ஏப்ரல் 19 ஆம் தேதியுடன் முடிவடைய உள்ளது. இந்தநிலையில், கொரோனாவுடன் போராடும் சுகாதார ஊழியர்களுக்கான காப்பீடு திட்டத்தை மேலும் 180 நாட்களுக்கு நீட்டித்து மத்திய அரசு இன்று அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது.

Categories

Tech |