கோடை காலம் தொடங்கிவிட்டது. மக்கள் அனைவரும் ஃபேன், ஏசி, ஏர்கூலர் போன்ற சாதனங்கள் இல்லாமல் இருக்கவே முடியாது என்ற நிலைமைக்கு ஆளாகியுள்ளனர். சென்னை போன்ற பெருநகரங்களில் பெரும்பாலான வீடுகளில் ஏசிகள் இருக்கும். அதே நேரம் மிடில் கிளாஸ் மக்கள் ஃபேன் மற்றும் ஏர் கூலர் போன்ற சாதனங்களை நாடிச் செல்வார்கள். அப்படி பெரும்பாலான மக்கள் பயன்படுத்தும் ஃபேன் எந்த மாதிரி இருக்கவேண்டும் என்பதை தெரிந்து கொள்வோம். நமது வீட்டிற்கு ஃபேன் வாங்க போகிறோம் என்றால் முதலில் நாம் பார்க்க வேண்டியது ஃபேன் சைஸ். பொதுவாக நாம் கடைக்கு சென்று ஃபேன் வாங்கினாலே அதை 48 இன்ச் சைஸில் வாங்குகிறோம். அதாவது 1200mm அப்படி கூட சொல்வார்கள்.
ஆனால் அதை எல்லா விதமான ரூம்களுக்கும் பயன்படுத்தினால் காற்று சரியாக வராது. அதாவது ஒவ்வொரு சைஸ் ரூம்களுக்கும் ஒவ்வொரு சைஸ் ஃபேன் பயன்படுத்த வேண்டும். 48 இன்சு ஃபேனை எங்கு பயன்படுத்த வேண்டும் என்றால் 10 முதல் 12 அடி இருக்கக்கூடிய ரூம்களில் பயன்படுத்த வேண்டும். அதற்கு கீழ் 7 அடி இருந்தால் 36 இன்ச் ஃபேன் பயன்படுத்த வேண்டும். 13 முதல் 14 அடி ரூம் என்று இருந்தால் அதற்கு 56 இன்ச் தான் பயன்படுத்த வேண்டும். 15 முதல் 16 அடி இருந்தால் 60 இன்ச் சைஸ் ஃபேனை பயன்படுத்த வேண்டும். இந்த சைஸை எப்படி கணக்கிடுகிறார்கள் என்றால் ஃபேன் சுற்றும் பொழுது இந்த கார்னரில் இருந்து அந்த கார்னர் வரை எவ்வளவு அளவு உள்ளது என்பதைப் பொருத்து கணக்கிடப்படும். அதேபோல் ஃபேனை சுற்றி இருக்கக்கூடிய இடைவெளி 3 அடி இருக்க வேண்டும். பிறகு நீங்கள் வாங்கக்கூடிய ஃபேன் கட்டாயம் 5 ஸ்டார் கொண்ட ஃபேனாக இருக்க வேண்டும். அப்படி இருந்தால் மட்டுமே உங்களது கரண்ட் பில் மிச்சமாகும்.