குன்றக்குடி அடிகளாரின் குருபூஜை விழா நடைபெற்றது.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள குன்றக்குடியில் வைத்து குன்றக்குடி அடிகளாரின் 27-ஆம் ஆண்டு குருபூஜை விழா நேற்று நடைபெற்றது. இதில் பேராசிரியர் சாமி தியாகராஜன், ரத்தினம், பிள்ளையார்பட்டி கோவிந்தானந்த சாமிகள், விஞ்ஞானி பாலகிருஷ்ணன், அழகப்பா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் ராமசாமி, சுப்பையா, சுந்தர் ஆவுடையப்பன், கவிஞர் பரமகுரு, அரு. நாகப்பன், முன்னாள் எம்.எல்.ஏ. ராம் அருணகிரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
அதன் பின்னர் சிறப்பாக பணிபுரிந்த பேராசிரியர் சாமி தியாகராஜன், ரத்தினம் ஆகியோரின் பணியை பாராட்டி குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் விருது வழங்கியுள்ளார். மேலும் அவர் கடந்த 1962-ஆம் ஆண்டில் தமிழகத்தில் உள்ள அனைத்து இந்து கோவில்களிலும் தமிழில் அர்ச்சனை செய்ய தமிழக அரசு உத்தரவிட்டது. அதற்கு முக்கியமான காரணம் குன்றக்குடி அடிகளார். மேலும் துறவு பணி என்பது எந்த சவாலையும் எதிர் கொண்டு தனது பணியை தவறாமல் செய்வதுதான். எனவே நாம் அனைவரும் அவர் விட்டு சென்ற பணியை தொடர்ந்து செய்ய வேண்டும் என அவர் கூறியுள்ளார்.