இதனை பேச சபாநாயகர் அப்பாவுக்கும், வேல்முருகனுக்கு வாக்குவாதம் ஏற்பட்டது. அப்பாவு வேல்முருகனை போதும்… சீக்கிரம் முடியுங்கள் என்று சொல்ல, வேல்முருகன் தொடர்ச்சியாக பேசிக்கொண்டு, இறுதியாக பேசி முடித்தார். இதையடுத்து பேசிய சபாநாயகர் அப்பாவு, எல்லாருமே மிரட்டலாம், உருட்டலாம் என்பதை மட்டும் தயவு செய்து மனதில் வெச்சுக்காதீங்க. நான் பொதுவாக சொல்கின்றேன்.
உங்களை யாரும் சொல்லவில்லை. தம்பி வேல்முருகன் சொல்லும்போது எழும்பி பேசினார்கள். நீங்க திமுக அந்தக் கணக்கில்தான் தம்பி இருக்கீங்க. கட்சிக்கு ஒரு ஆள் தான் பேசணும். கம்பம் ராமகிருஷ்ணன் பேசியாச்சு. அதற்கு பிறகு அந்த வாய்ப்பு உங்களுக்கு தந்திருக்கிறேன். தந்தால் 2 நிமிடத்தில் முடிக்க வேண்டும்.
எல்லோருக்கும் உரிமை இருக்கு. அவுங்களுக்கு கொடுத்த மாதிரி எனக்கு தாங்க என்று எல்லோரும் கேட்க இந்த அவையில் உரிமை இருக்கின்றது. எல்லோரையும் அரவணைத்து போகணும். அது தான் முதல்வரின் எண்ணம். அந்த அடிப்படையில்தான் சபையில் யாருக்கு மறுப்பு சொல்லாமல் இருக்கின்றோம். அதை மனதில் வைத்து செயல்பட வேண்டும் என்று உங்களை அன்புடன் கேட்டு கொள்கின்றேன் என தெரிவித்தார்.