Categories
ஆட்டோ மொபைல்

இதோட விலைக்கு ஒரு அளவே கிடையாது…. ரோல்ஸ் ராய்ஸ் பற்றி தெரியாத தகவல்கள் இதோ….!!

இங்கிலாந்தில் 1905ம் ஆண்டு முதல் தயாரிக்கப்பட்ட ரோல்ஸ் ராய்ஸ் கார்கள், ஒரு பந்தயத்தில் கலந்துகொண்டதன் மூலம் உலகளவில் பிரபலமானது. பிரிட்டன் காலனி ஆதிக்கம் இந்தியாவில் இருந்ததால், 1908ம் ஆண்டில் ரோல்ஸ் ராய்ஸ் இந்தியாவில் அறிமுகமாயின. மும்பையில் நடைபெற்ற ஒரு கார் பந்தய போட்டியில்ரோல்ஸ் ராய்ஸ் கார் சுலபமாக ஜெய்ததது. இந்த ரோல்ஸ் ராய்ஸ் கார்களின் விலை ஏன் அதிகமாக இருக்கிறது என்று தெரியுமா? அதற்கான காரணங்களை இப்போது பார்க்கலாம்.

முதலாவது இந்தக் காரின் ஆரம்ப விலை ஐந்து கோடி ஆகும். ஆனால் இந்த காரின் அதிகபட்ச விலை சொல்ல முடியாத அளவுக்கு இருக்கும் என்று கூறப்படுகின்றது. ஏனெனில் கஸ்டமரை பொறுத்து இதன் விலை உள்ளது என்று கூறப்படுகிறது. ஏனென்றால் மற்ற கார்களை போன்று இல்லாமல் ரோல்ஸ்ராய்ஸ் நிறுவனம் கஸ்டமர் விருப்பத்திற்கு ஏற்றவாறு காரை உருவாக்கித் தருவார்கள். எடுத்துக்காட்டாக துபாயை சேர்ந்த ஒருவர் தன்னுடைய ரோல்ஸ்ராய்ஸ் காரை தங்கத்தில் உருவாக்கி வைத்திருக்கிறார்.

இரண்டாவதாக ரோல்ஸ்ராய்ஸ் கம்பெனி ஆரம்பித்ததிலிருந்து இப்போது வரைக்கும் அனைத்து ஸ்பேர் ஸ்பாட்ஸ்களையும் கையாலேயே தயாரிக்கிறார்கள். அதாவது இயந்திரங்களை பயன்படுத்தாமல் மனிதர்களை வேலைக்கு வைத்து தான் தயாரிக்கிறார்கள். இதுவும் இந்த காரில் அதிக விலைக்கு ஒரு காரணமாக கூறப்படுகிறது. மூன்றாவதாக இந்த காரை சுற்றி லேசாக ஒரு கோடு போடப்பட்டிருக்கிறது. அந்தக் கோடை இயந்திரத்தை வைத்து போட மாட்டார்கள். ஒரு மனிதர் தான் போடுவாராம்.  நான்காவதாக இந்த காரில் சக்கரத்தின் நடுவில் இருக்கக்கூடிய ரோல்ஸ் ராய்ஸ் என்கிற லோகோ கார் சக்கரம் எவ்வளவு வேகமாக சுற்றினாலும் அந்த லோகோ மட்டும் சுற்றாமல் அப்படியே இருக்கும்.

Categories

Tech |