தொடர் மழையின் காரணமாக வனப்பகுதி மீண்டும் பசுமையாக காணப்படுகிறது.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி, கோத்தகிரி, குன்னூர், கூடலூர், பந்தலூர் போன்ற பகுதிகளில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த மழையின் காரணமாக வெப்பத்தின் தாக்கம் குறைந்துள்ளது. இந்நிலையில் வனப்பகுதியில் வறட்சியின் காரணமாக வன விலங்குகள் உணவு மற்றும் தண்ணீர் தேடி குடியிருப்பு பகுதிக்குள் வரத் தொடங்கியது.
தற்போது பல இடங்களில் பரவலாக மழை பெய்துள்ளதால் வனப்பகுதிகளில் மீண்டும் புல் முளைத்து பசுமை திரும்பியுள்ளது. இதனையடுத்து குளம், குட்டை போன்றவற்றிலும் தண்ணீர் காணப்படுகிறது. இதனால் வன விலங்குகளுக்கு தேவையான பசுந்தீவனம் மற்றும் தண்ணீர் தட்டுப்பாடு பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைத்துள்ளது. மேலும் மழையின் காரணமாக வனப்பகுதிகளில் காட்டுத் தீ பரவும் அபாயமம் குறைந்துள்ளது. இந்த மழையின் காரணமாக விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கின்றனர்.