Categories
தேசிய செய்திகள்

பென்சன் பெறுபவர்களுக்கு…. மத்திய அரசு வைத்த செக்…. வெளியான ஷாக் நியூஸ்….!!!!

கடந்த 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் கொரோனா தொற்று பரவல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டிருந்தது. அதன் பிறகு மத்திய அரசுக்கு செலவுகள் அதிகரித்ததால் பென்ஷனர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட வேண்டிய அகவிலை நிவாரணம் மற்றும் அகவிலைப்படி நிறுத்தி வைக்கப்பட்டது. இதையடுத்து பல மாதங்களுக்கு பிறகு 2021ஆம் ஆண்டு அக்டோபர், ஜூலை மாதங்களில் மிக சமீபத்திய உயர்வுகள் வழங்கப்பட்டுள்ளது.

மேலும் மத்திய அரசு ஊழியர்கள் 47.14 லட்சம் பேர் மற்றும் ஓய்வூதியதாரர்கள் 68.62 லட்சம் பேர் பயன்பெறும் வகையில் மத்திய அமைச்சரவை அக்டோபர் மாதம் 3 சதவீதம் முதல் 31 சதவீதம் வரை அகவிலைப்படியை அதிகரித்துள்ளது. இந்த நிலையில் ஏப்ரல் 10ஆம் தேதி பென்சன் விதிகளை திருத்துவதற்கான நிலைக்குழுவின் 32வது கூட்டம் நடந்தது.

இந்த கூட்டத்தில் அரசு அதிகாரிகள், ஓய்வூதியதாரர்களின் பிரதிநிதிகள், பென்சனர் நலத்துறை இணையமைச்சர் ஜிதேந்திர சிங் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் பேசிய நிதி அமைச்சகத்தின் பிரதிநிதி ஒருவர் பென்சனர்களுக்கும், அரசு ஊழியர்களுக்கும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அகவிலை நிவாரணமும், அகவிலைப்படியும் வழங்கப்படாது என்று கூறியுள்ளார். இதனால் பென்சனர்கள் மிகவும் வருத்தத்தில் உள்ளனர்.

Categories

Tech |