அடுத்தடுத்து உள்ள 5 கடைகளில் மர்ம நபர்கள் கைவரிசையைக் காட்டி சென்றுள்ளனர்.
திருச்சி மாவட்டத்திலுள்ள அரியமங்கலம் அருகே இருக்கும் அம்பிகாபுரம் இந்திரா தெருவில் உள்ள அரிசி கடை, பால் கடை, எண்ணை கடை உள்பட 5 கடைகளில் அந்தந்த கடைகளின் உரிமையாளர்கள் நேற்று காலையில் வந்து பார்த்த பொழுது பூட்டுகள் உடைக்கப்பட்டு திறந்து கிடந்தன. இந்நிலையில் அரிசி கடையில் ரூபாய் 12,000 ரொக்கம், டிவி உள்ளிட்டவை திருடப்பட்டு இருக்கின்றது. செல்போன் கடையில் 4 செல்போன்கள் திருடப்பட்டு இருக்கின்றது.
மற்ற மூன்று கடைகளில் பொருட்கள் மற்றும் பணம் திருடப்பட்டுள்ளது. இதனால் அந்தந்த கடை உரிமையாளர்கள் இதுபற்றி அரியமங்கலம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். இதை தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றார்கள். அந்த பகுதியில் இருக்கும் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து திருடிய மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.