Categories
மாநில செய்திகள்

இளையராஜா செய்தது சரியே….. தமிழிசை சவுந்தரராஜன் ட்விட்….!!!!

தெலுங்கானா மாநில முதல்வர் மற்றும் புதுச்சேரி மாநில துணைநிலை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளதாவது: “இணையற்ற இசைஞானி இளையராஜா அவர்கள் பார்புகழும் பாரத பிரதமரை அண்ணல் அம்பேத்கருக்கு ஒப்பிட்டு அவர்தம் அடிமனதிலிருந்து வெளிவந்த உணர்வுகளை இங்கே தமிழகத்தில் வெறுப்பு அரசியல் விதைக்கும் சிலர் அவரை சுடு சொற்களால் விமர்சிப்பது சரியா?

கருத்து சுதந்திரம் சில கருத்துக்களுக்கு மட்டுமா? அல்லது சிலருக்கு மட்டும் தானா?, தன் கருத்தை சொல்ல இசைஞானி இளையராஜாவுக்கு முழு சுதந்திரம் உள்ளது என்பதை உரக்க சொல்வோம். விழித்துக்கொள் தமிழகமே !!!! என்று பதிவிட்டு தனது ஆதரவை வெளிப்படுத்தினார். மேலும், தமிழிசை சவுந்தரராஜன் இன்று அளித்துள்ள பேட்டி ஒன்றில், பிரதமர் மோடி சமூகத்தில் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக நிறைய விசயங்களை செய்துள்ளார். டாக்டர் பி.ஆர். அம்பேத்காருக்காக நினைவகம் ஒன்றை கட்டியுள்ளார். அவர் இயற்றிய அரசியலமைப்பை புனித நூல் என்று குறிப்பிட்டு உள்ளார். அதனால், பிரதமர் மோடி மற்றும் டாக்டர் பி.ஆர். அம்பேத்காரை இசையமைப்பாளர் இளையராஜா சரியாகவே ஒப்பிட்டு உள்ளார் என்று கூறியுள்ளார்.

Categories

Tech |