Categories
சினிமா தமிழ் சினிமா

சோகத்தில் இருந்த விஜய் ரசிகர்களுக்கு கிடைத்த குட் நியூஸ்…. தளபதி படைத்த மெஹா சாதனை….!!!

பீஸ்ட் படத்தில் வெளியான அரபிக் குத்து பாடல் மெகா சாதனை படைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

தமிழ் திரையுலகில் பிரபல முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் இவர் நடிப்பில் ஏப்ரல் 13ம் தேதி தியேட்டரில் ரிலீசான திரைப்படம் ”பீஸ்ட்”. சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார்.

மிகப் பெரிய எதிர்பார்ப்பில் வெளிவந்த பிஸ்ட் திரைப்படம் நெகட்டிவ் விமர்சனங்களை சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது. மேலும் இப்படம் எதிர்பார்த்த அளவுக்கு பெரிய அளவில் வசூலை பெறவில்லை என்று தகவல்கள் வெளியாகி வருகின்றன.

இதற்கிடையில்  இப்படத்தின்  முதல் சிங்கிளாக அரபி குத்து பாடல் கடந்த பிப்ரவரி மாதம் காதலர் தினத்தன்று வெளியாகி பட்டிதொட்டியெங்கும் ஹிட்டடித்தது. இந்த நிலையில் இந்திய அளவில் அரபிக் குத்து பாடல்  ஆறு மில்லியன் லைக்குகளை வித்து மேஹா சாதனை படைத்துள்ளது. இதனை தொடர்ந்து இப்பாடலுக்கு  சின்னத்திரையில் இருந்து பெரிய திரையில் உள்ள அனைவரும் குத்தாட்டம் போட்டு வருகின்றனர். பீஸ்ட் திரைப்படம் வெளியாகி நெகட்டிவ் விமர்சனங்களை குவித்து வரும் நிலையில் சோகத்தில் இருந்த ரசிகர்கள் தற்போது அரபிக் குத்து பாடல் படைத்துள்ள புதிய சாதனையால் உற்சாகத்தில் உள்ளனர்.

Categories

Tech |