Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

பயங்கர விபத்து…. 2 பேர் பலி…. தீவிர சிகிச்சை பிரிவில் 3 பேர் அனுமதி…. பெரும் பரபரப்பு….!!

பயங்கர விபத்தில் கணவன் – மனைவி 2 பேரும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

புதுச்சேரி மாநிலத்தில் யுவராஜ் – ஞானம்மாள் தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இவர்களுக்கு ராஜேஷ் என்ற மகன் இருக்கிறார். இவர்களுடைய உறவினர்களான தனலட்சுமி, புவனேஸ்வரி ஆகியோருடன் சேர்ந்து யுவராஜ், ஞானாம்பாள் மற்றும் ராஜேஷ் ஆகியோரும் சேர்ந்து ஒரு திருமண நிச்சயதார்த்த விழாவில் கலந்து கொள்வதற்காக சேலம் மாவட்டம் தம்மம்பட்டி பகுதிக்கு காரில் சென்றுள்ளனர். இவர்கள் நிச்சயதார்த்த விழா முடிந்து காரில் சொந்த ஊருக்கு திரும்பியுள்ளனர். இவர்கள் சென்ற கார் கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே அம்மையகரத்தில் சென்று கொண்டிருந்தது. அப்போது கட்டுப்பாட்டை இழந்த கார் திடீரென சாலையின் நடுவே இருந்த தடுப்பு சுவரின் மீது பயங்கரமாக மோதியது. இதில் காரின் முன்பகுதி சேதமடைந்தது. இந்த விபத்தில் யுவராஜ் மற்றும் ஞானம்பாள் ஆகிய 2 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்த விபத்தில் புவனேஸ்வரி, தனலட்சுமி, ராஜேஷ் ஆகிய 3 பேருக்கும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் சின்னசேலம் காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த ராஜேஷ், தனலட்சுமி, புவனேஸ்வரி ஆகிய 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அதன்பிறகு இந்த விபத்தில் உயிரிழந்த ஞானம்பாள் மற்றும் யுவராஜின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |