Categories
சற்றுமுன் சினிமா

JUSTIN : ‘சிங்கக்குட்டி பொறந்தாச்சு’…. ஆண் குழந்தைக்கு அம்மாவான காஜல்….. குவியும் வாழ்த்துக்கள்….!!!!

தமிழ் தெலுங்கு ஆகிய மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை காஜல் அகர்வால். தமிழில் நடிகர் விஜய், அஜித், சூர்யா, கார்த்தி என முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்து தனக்கென்று ஒரு ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ளவர். இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட பல மொழி படங்களில் நடித்துள்ளார்.

கடந்த 2020ஆம் ஆண்டு கௌதம் கிசுலு என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டார். சமீபத்தில் அவர் கர்ப்பமாக இருந்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு இருந்தார். இந்நிலையில் அவருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதைத் தொடர்ந்து அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Categories

Tech |