பிரசித்தி பெற்ற கோவிலின் உண்டியல் எண்ணும் பணி நடைபெற்றது.
கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள சுசீந்திரம் பகுதியில் பிரசித்தி பெற்ற தாணுமாலய சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்வர். இந்த கோவிலுக்கு வரும் பக்தர்கள் நேர்த்திகடன் செலுத்தும் வகையில் 11 உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளது. இந்த உண்டியல் எண்ணும் பணி 3 மாதங்களுக்கு ஒருமுறை நடைபெறும்.
இந்நிலையில் நேற்று உண்டியல் எண்ணும் பணி நடைபெற்றது. இதற்கு மாவட்ட இணை கோயில்களின் தலைமை அதிகாரி ஞானசேகர் தலைமை தாங்கினார். இந்த பணத்தை எண்ணும் பணியில் திருக்கோவில் பணியாளர்கள் மற்றும் சுய உதவி குழுக்களை சேர்ந்த பெண்கள் ஈடுபட்டிருந்தனர். இதில் மொத்தம் 13,50,956 ரூபாய் கிடைத்துள்ளது. அதன்பிறகு 8 கிராம் 400 மில்லி தங்கமும், 60 கிராம் வெள்ளியும் மற்றும் வெளிநாட்டு பணங்களும் கிடைத்துள்ளது.