பலத்த மழையின் காரணமாக தரைப்பாலம் அடித்துச் செல்லப்பட்டதால் பொதுமக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகினர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இங்குள்ள நாகர்கோவில், பூதப்பாண்டி பகுதிகளில் அரை மணி நேரமாக மழை வெளுத்து வாங்கியது. இங்குள்ள கீரிப்பாறை பகுதியில் இருந்து லேபர் காலனிக்கு செல்வதற்காக தரைப்பாலம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்த தரைப்பாலம் மழையில் அடித்துச் செல்லப்பட்டது. இதனால் அப்பகுதி மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.