மஹாராஷ்டிரா மாநிலத்தில் முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையில் சிவசேனா தேசியவாத காங்… மற்றும் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு மசூதிகளில் ஒலிபெருக்கிகள் பயன்படுத்துவதை தடை செய்வதற்கு மகாராஷ்டிரா நவநிர்மான் சேனா கட்சியின் தலைவர் ராஜ் தாக்கரே தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றார். ஒலிபெருக்கி பயன்பாட்டை நிறுத்தாவிட்டால் மசூதிகளுக்கு முன்பு ஹனுமான் சாலிசா பாடலை ஒலிபெருக்கியில் ஒலிக்கச் செய்வோம் என்று எச்சரித்துள்ளார்.
இதற்கு ஆதரவாக பாஜக குரல் கொடுத்து வருகின்றது. இந்நிலையில் மாநிலத்தில் ஒலிபெருக்கிகள் பயன்படுத்துவது குறித்த வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி மசூதிகளில் தொழுகை நடப்பதற்கு முன்பும் பின்பும் அவற்றை ஒலிக்க செய்யவும், 100 மீட்டர் சுற்றளவில் ஒலிக்கவும்,தடை விதிக்கப்படுவதாக போலீஸ் கமிஷனர் தீபக் பாண்டே அறிவித்துள்ளார். இதனை மீறி செயல்படுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.