Categories
சினிமா தமிழ் சினிமா

தயவு செய்து யாரும் அதை மட்டும் செய்யாதீர்கள்….. ரசிகர்களுக்கு பிரபல நடிகை அட்வைஸ்…!!!!!!

சிம்புவின் விண்ணைத்தாண்டி வருவாயா என்ற படத்தில் துணை நடிகையாக அறிமுகமானவர்  சமந்தா. இவர் இன்று தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். தற்சமயம் பல பட வாய்ப்புகளை கையில் வைத்திருப்பதால் சமந்தா பிஸியான நடிகையாக இருக்கிறார். அடுத்ததாக இவர் விஜய்சேதுபதியுடன் நடித்த காத்துவாக்குல 2 காதல் திரைப்படம் வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் சமந்தாவுடன் நயன்தாராவும் நடித்திருக்கிறார்.

சமீபத்தில் இந்த படத்தில் இருந்து வெளியான பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை  பெற்றிருக்கிறது. இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் சமந்தா அடிக்கடி தன் புகைப்படங்களை பதிவிடுவது மட்டுமல்லாமல் ரசிகர்களுடன் உரையாடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார். அந்தவகையில் சமந்தாவிடம் ரசிகர் ஒருவர் நீங்கள் வாங்கிய முதல் சம்பளம் எவ்வளவு என்று கேட்டதற்கு சமந்தா பள்ளியில் பயிலும்போது செய்த ஒரு வேளைக்கு 500 ரூபாய் முதல் சம்பளமாக வாங்கியதாக பதிலளித்துள்ளார். மேலும் ஒரு ரசிகர் பச்சை குத்துவதை பற்றி  கேட்க அதற்கு சமந்தா தயவு செய்து அதை மட்டும் யாரும் செய்யாதீர்கள்.

எந்த சூழலிலும் பச்சை குத்திக்  கொள்ளாதீர்கள் என்று ரசிகர்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார். சில ஆண்டுகளுக்கு முன் சமந்தா தனது முன்னாள் கணவர் நாக சைதன்யாவின் செல்ல பெயர் தனது உடம்பில் பச்சை குத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Categories

Tech |