Categories
மாநில செய்திகள்

“குஷியோ குஷி”…. பள்ளி மாணவர்களுக்கு அடுத்த மாதத்திலிருந்து…. தமிழக அரசு அதிரடி….!!!

தமிழகத்தில் கொரோனா காரணமாக கடந்த இரண்டு வருடங்களாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு குறைந்த நிலையில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் பள்ளிகள் அனைத்தும் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடந்து கொண்டிருக்கிறது. அதுமட்டுமல்லாமல் நடப்பு ஆண்டில் மாணவர்கள் அனைவருக்கும் கட்டாயம் தேர்வு நடைபெறும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. அதற்கான தேர்வு அட்டவணைகளும் வெளியிடப்பட்டுள்ளன.

அதனால் தேர்வுக்கு குறைந்த அளவிலான நாட்கள் மட்டுமே உள்ளதால் பாடத் திட்டங்களை விரைந்து நடத்தி முடிக்க சனிக்கிழமைகளில் பள்ளிகள் செயல்பட்டு வருகிறது. ஓரளவு பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டு மீதமுள்ள பாடத் திட்டங்களை நடத்தி முடிக்க சிறப்பு வகுப்புகள் நடத்த வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. அதனால் ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை பள்ளிகள் இயங்கி கொண்டிருக்கின்றன.

இந்நிலையில் அடுத்த மாதத்திலிருந்து அரசு பள்ளிகளுக்கு சனிக்கிழமை அன்று விடுமுறை விட பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது. கொரோனா ஊரடங்கு காரணத்தால் பல வகுப்புகள் தடையானது கருத்தில் கொண்டு சனிக்கிழமையும் பள்ளிகள் இயங்கின.இதையடுத்து சனிக்கிழமைகளில் விடுமுறை வேண்டும் என ஆசிரியர்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்த நிலையில் அதிகாரிகள் இந்த முடிவை எடுத்துள்ளனர். இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |