Categories
உலக செய்திகள்

இதுதான் காரணமா?…. பாகிஸ்தானில் மின் உற்பத்தி பாதிப்பு…. நிதியமைச்சர் வெளியிட்ட தகவல்….!!!!

உக்ரைன்-ரஷ்யா போர் காரணமாக ஏற்பட்டுள்ள உலகளாவிய எரிசக்தி குறைபாட்டால் பாகிஸ்தானில் எரிசக்தி கொள்முதல் அளவு கடந்த 9 மாதங்களில் மட்டும் 15 பில்லியன் டாலர் அளவு உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இயற்கை எரிவாயு, நிலக்கரி என மின் உற்பத்திக்கு அவசியமான பொருட்களை வாங்குவதற்கு போதிய அளவு நிதியும் இல்லை.

இதனால் சுமார் 3500 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளதாகவும், இந்த குளறுபடிகள் ஆஃப்லைன் உற்பத்தி முறையிலும் நீடிப்பதாக பாகிஸ்தான் புதிய அமைச்சரவையின் நிதியமைச்சர் மிப்தா இஸ்மாயில் கூறியுள்ளார். அதேபோல் ஒட்டுமொத்த உற்பத்தியில் சுமார் 7000 மெகாவாட் மின் உற்பத்தி தடைபட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Categories

Tech |