Categories
சினிமா தமிழ் சினிமா

கமல் நடிப்பில் உருவான விக்ரம் படம்…. வெளிநாட்டில் இசை வெளியீட்டு விழா…. வெளியான சூப்பர் தகவல்….!!!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் விக்ரம் படத்தை மிகப்பெரிய அளவில் பிரமோட் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மாஸ்டர், கைதி, மாநகரம் என்ற ஹாட்ரிக் ஹிட் படங்களைக் கொடுத்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கமலை வைத்து விக்ரம் என்ற படத்தை இயக்கி வருகிறார். விஜய் சேதுபதி, பகத் பாசில், நரேன், காளிதாஸ் ஜெயராம் என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. இப்படத்தை கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்துள்ளது. அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்திற்கு கங்காதரன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படம் வருகிற ஜூன் மூன்றாம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இப்படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை நடிகர் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இதை தொடர்ந்து விக்ரம் படத்தை மிகப்பெரிய அளவில் பிரமோட் செய்வதற்கு நடிகர் கமல் திட்டமிட்டுள்ளதாகவும், அதற்கான பணிகள் நடந்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. விக்ரம் படத்தின் இசை வெளியீட்டு விழாவை பிரமாண்டமாக நடத்த முடிவு செய்துள்ள கமல், அதனை துபாயில் நடத்த முடிவு செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. வருகிற மே மாதம் முதல் வாரத்தில் இந்த நிகழ்ச்சி நடக்க வாய்ப்புள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று கூறப்பட்டுள்ளது.

Categories

Tech |