விருதுநகர் அரசு மருத்துவமனையில் மருத்துவர் ஒருமையில் திட்டியதால் செவிலியர்கள் பணி புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.
விருதுநகர் அரசு தலைமை மகப்பேறு மருத்துவமனையில் மருத்துவராக பணிபுரிபவர் ராஜேஸ்வரி. இவர் நேற்று இரவு கர்ப்பிணி பெண்ணிற்கு பிரசவம் பார்க்க அறுவை சிகிச்சை செய்துள்ளனர். அப்போது அவருக்கு உதவியாக இருந்த செவிலியரை ஒருமையில் மருத்துவர் திட்டியதாக சொல்லப்படுகிறது. இதன் காரணமாக அந்த செவிலியர் மனமுடைந்துபோக,
இன்று காலை பாதிக்கப்பட்ட செவிலியருக்காக 50க்கும் மேற்பட்ட செவிலியர்கள் பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்பு தகவலறிந்து வந்த மருத்துவமனை கண்காணிப்பாளர் பிரகலாதன், விருதுநகர் கிழக்கு காவல் நிலைய அதிகாரிகள், ஆகியோர் நடத்திய பேச்சுவார்த்தைக்கு பின் செவிலியர்கள் பணிக்கு திரும்பினர்.செவிலியர்கள் பணி புறக்கணிப்பு செய்த போது எந்த வித நோயாளிகளுக்கும் பிரச்னை ஏற்படவில்லை என்றாலும் அப்பகுதி சிறிதுநேரம் பரபரப்பாக காணப்பட்டது.