Categories
அரசியல்

அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை…. பெட்ரோல், டீசல் போடக்கூடாதாம்?…. அரசு திடீர் முடிவு….!!!!

கடந்த இரண்டு வாரங்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருகிறது. இந்நிலையில் பெட்ரோல் மற்றும் டீசல் நுகர்வை வைப்பதற்காக 2 நாள் அரசு விடுமுறை அளிப்பதற்கு நேபாள அரசு பரிசீலனை செய்து வருகிறது. இலங்கையை போலவே நேபாள அரசும் பொருளாதார நெருக்கடியின் தொடக்க நிலையில் உள்ளது. பெட்ரோல்,டீசல் உள்ளிட்ட பெட்ரோலிய பொருட்களின் விலை அதி வேகத்தில் உயர்ந்து வரும் நிலையில் நேபாளம் அன்னிய செலவாணி கையிருப்பு நெருக்கடியை சந்தித்துள்ளது.

அதனால் அரசு அலுவலகங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்கு இரண்டு நாட்களுக்கு விடுமுறை வழங்க நேபாள அரசுக்கு மத்திய வங்கியும், நேபாள ஆயுள் காப்பீட்டு நிறுவனமும் பரிந்துரை செய்துள்ளது. இது தொடர்பாக நேபாள அரசு பரிசீலனை செய்து வருகிறது. இதன்படி அரசு அலுவலகங்களுக்கு இரண்டு நாட்கள் விடுமுறை அழைத்தால் நிறைய பணத்தை சேமிக்க முடியும் என ஆயில் கார்ப்பரேஷன் கருதுகின்றது.

இந்த நிறுவனம் மானிய விலையில் பெட்ரோல் மற்றும் டீசலை விற்பனை செய்து வருகின்றது. தற்போது சர்வதேச மார்க்கெட்டில் கச்சா எண்ணெய் விலை உயர்வாக இருப்பதால் ஆயுள் காப்பீட்டின் கடும் நெருக்கடியில் சிக்கியுள்ளது. இருந்தாலும் அரசு இதுவரை எந்த ஒரு முடிவும் எடுக்கவில்லை. அதனால் இந்தக் கோரிக்கை அரசிடம் முன்வைக்கப்பட்டுள்ளது. அன்னிய செலவாணி நெருக்கடியை சமாளிப்பதற்கு விலையுயர்ந்த கார்கள் மற்றும் தங்கம் உள்ளிட்ட விலை உயர்ந்த பொருட்களை இறக்குமதி செய்யவும் நேபாள அரசு தடை விதித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |