ஆட்டோ ஓட்டுனரை இரண்டு பேர் பீர் பாட்டிலால் அடித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாவட்டத்தில் உள்ள பெரம்பூர் வீனஸ் பகுதியில் ஆட்டோ ஓட்டுநரான மதன கோபால் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த 11-ஆம் தேதி தனது ஆட்டோவில் ரெட்டேரி ஏரிக்கரை அருகே இருக்கும் மெக்கானிக் கடைக்கு சென்றுள்ளார். அப்போது 2 பேர் பொது இடத்தில் அமர்ந்து மது குடித்துக் கொண்டிருந்தனர். இதனை மதனகோபால் தட்டி கேட்டபோது தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் கோபமடைந்த 2 பேரும் மதனகோபாலை பீர் பாட்டிலால் சரமாரியாக அடித்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடினர். இதனால் படுகாயமடைந்த மதனகோபாலை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி மதனகோபால் நேற்று முன்தினம் பரிதாபமாக இறந்துவிட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மதனகோபாலை கொலை செய்த குழந்தைவேலு, ஸ்டீபன் ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.