Categories
தேனி மாவட்ட செய்திகள்

காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால்…. காதலர்கள் எடுத்த விபரீத முடிவு…. தேனியில் பரபரப்பு….!!

காதலுக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் மனமுடைந்த காதலர்கள் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியில் உள்ள வடகரை பட்டாப்புளி தெருவில் பெரியசாமி(20) என்பவர் வசித்து வருகிறார். தொழிலாளியான இவர் அதே பகுதியல் வசிக்கும் நர்சிங் கல்லூரி மாணவி நித்யா(18) என்ற பெண்ணை கடந்த 5 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் இவர்களின் காதலுக்கு இரு தரப்பு பெற்றோரும் எதிர்ப்பு தெரிவித்ததால் மனமுடைந்த காதலர்கள் தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்தனர்.

இதனையடுத்து அவர்கள் இருவரும் தர்மலிங்கபுரம் கிராமத்தில் உள்ள ஆள்நடமாட்டம் இல்லாத பகுதிக்கு சென்று விஷம் குடித்தனர். இதனைதொடர்ந்து சிறிது நேரத்திலேயே இருவரும் அங்கேயே மயங்கி விழுந்துள்ளார். மேலும் மறுநாள் காலையில் பெரியசாமி மயக்கம் தெளிந்து எழுந்து பார்த்தபோது நித்யா வாயில் நுரைதள்ளியபடி உயிரிழந்து கிடந்துள்ளார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த பெரியசாமி உடனடியாக 108 ஆம்புலன்சுக்கு தெரிவித்துள்ளார்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு ஆம்புலன்ஸ் மற்றும் தேவதானப்பட்டி போலீசார் நித்யாவின் உடலை உடற்கூறு ஆய்விற்கு அனுப்பி வைத்துவிட்டு, பெரியசாமியை சிகிச்சைக்கு தேனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்போது அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |