Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

உதவி கேட்க சென்ற தொழிலாளி…. உறவினரே செய்த காரியம்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

உறவினர்களிடையே ஏற்பட்ட தகராறில் கூலித்தொழிலாளியை கத்தியால் குத்திய நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

நாமக்கல் மாவட்டம் பரமத்தி அருகே உள்ள பி.எஸ்.கே நகரில் அருண்குமார்(24) என்பவர் வசித்து வருகிறார். குடும்பத்தகராறு காரணமாக இவரது மனைவி மோனிகா கோபித்துகொண்டு தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில் பரமத்தியில் உள்ள அகதிகள் முகாமில் வசிக்கும் மோனிகாவின் மாமா நகுலேஸ்வரனிடம் சென்று அருண்குமார் மனைவியை அழைத்து வருமாறு கூரின்னர்.

அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த நகுலேஸ் அவரிடம் இருந்த கத்தியால் அருண்குமாரின் தலை மற்றும் கைகளில் சரமாரியாக குத்தியுள்ளார். இந்த மோதலில் படுகாயமடைந்த அருண்குமாரை அக்கம்பக்கத்தினர் மீட்டு நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து பரமத்தி காவல்துறையினர் வழக்குபதிவு செய்து நகுலேஸ்வரனை கைது செய்துள்ளனர்.

Categories

Tech |