Categories
சினிமா

ரஜினியின் சாதனையை முறியடித்த கே.ஜி.எஃப் 2…. 4 நாட்களில் 50 கோடிக்கு மேல் வசூல்….!!!!

பொதுவாக ஒரு மொழியில் வெளியிடப்படும் படங்கள் பல மொழிகளில் டப்பிங் செய்து வெளியிடப்படுகிறது. அதன்படி தெலுங்கு மொழியில் டப்பிங் செய்து வெளியிட படும் பிற மொழி படங்களில் தமிழ் படங்களே அதிக வசூலை அள்ளுகின்றன. அதிலும் குறிப்பாக ரஜினி நடிப்பில் வெளியான 2.0 மற்றும் எந்திரன் ஆகிய திரைப்படங்கள் 50 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை படைத்திருக்கிறது.

இந்த நிலையில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் கே ஜி எஃப் 2 திரைப்படம் இந்த சாதனையை முறியடித்துள்ளது. இந்தப் படம் வெளியான நான்கு நாட்களில் தெலுங்கில் 50 கோடிக்கு மேல் வசூலித்த ரஜினி படம் செய்த சாதனையை தற்போது முறியடித்துள்ளது. தெலுங்கு மட்டுமல்லாமல் தமிழகத்திலும் இந்த திரைப்படம் அதிக அளவு வசூலை அள்ளியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |