உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் தொடர்ந்து நீடித்து வருகிறது. இப்போரில் உக்ரைன் நாட்டின் தலைநகரான கீவ்,கார்கிவ், மரியுபோல் உட்பட பல நகரங்கள் நிலைகுலைந்துள்ளது. மேலும் இந்த போரில் பொதுமக்கள், இருநாட்டு படையினர் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். ரஷ்யபடையினர் ஆக்கிரமித்த நகரங்களை உக்ரைன் படையினர் மீண்டும் தங்களது கட்டுப்பாட்டில் கொண்டு வருகின்றனர். இதன் காரணமாக பல நகரங்கள் தொடர்ந்து உக்ரைன் -ரஷ்ய படையினர் இடையில் மோதல் நடைபெற்று வருகிறது. இப்போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா, மேற்கத்திய நாடுகள் ராணுவஉதவி செய்து வருகின்றன.
அதன்படி கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள அதிநவீன ஆயுதங்கள், போர் தளவாடங்களை அமெரிக்கா உக்ரைனுக்கு வழங்கி வருகிறது. இந்த நிலையில் உக்ரைனின் கிழக்கு நகரங்கள் மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது. அதிலும் குறிப்பாக கிழக்கு பகுதியிலுள்ள முக்கியமான நகரமான லிவ் மீது ரஷ்யா சரமாரி வான்வழி தாக்குதலை நடத்தி வருகிறது. அந்த அடிப்படையில் லிவ் நகரில் இன்று அதிகாலை அடுத்தடுத்து ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டது.
இதில் பிற கிழக்கு நகரங்களை ஒப்பிடும்போது லிவ் நகரில் தாக்குதல் குறைவாகவே இருந்தது. ஆனால் இப்போது லிவ் நகர் மீதும் ரஷ்யா தாக்குதலை தீவிரப்படுத்தி இருக்கிறது. ரஷ்யா அதிகாலை 5 ஏவுகணைகளை லிவ் நகரை குறிவைத்து ஏவியதாக நகர மேயர் ஆண்ட்ரி சடொவ்யு தன் பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இந்த ஏவுகணை தாக்குதலை அடுத்து நகரம் முழுவதும் பயங்கர சத்தத்துடன் குண்டுகள் வெடித்ததாக மேயர் தெரிவித்துள்ளார்.