இளையராஜாவுக்கு, எதிரான விமர்சனங்களுக்கு பாரத ஜனதா தேசிய தலைவர் ஜேபி நட்டா கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் “தமிழ்நாட்டில் ஆளும் கட்சிக்கு ஆதரவானவர்கள், இசையமைப்பாளர் இளையராஜா கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்கள். குறிப்பிட்ட ஒரு அரசியல் கட்சிக்கும், அதன் கூட்டணி கட்சிகளுக்கும் இளையராஜாவின் கருத்துக்கள் பிடிக்கவில்லை என்பதால் ஒரு இசை மாமேதையை இப்படி தாக்குவதா? என்று பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் ஜேபி நட்டா கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் அரசியல் காரணங்களுக்காக இளையராஜா கடுமையான வார்த்தைகளால் அவமதிக்கப்படுவதாக கூறியுள்ள அவர், மாற்று கருத்துகளை கொண்டிருப்பதால் மட்டுமே ஒருவரை அவமதிப்பது எந்தவிதத்தில் சரி? எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.